முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் ஹரிணி – அமெரிக்கத் தூதுவர் குழு இடையே சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள்
சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமைக் குழுவின் உறுப்பினர்களுக்கும் இடையில்
கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் நேற்று(27) இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல்
செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள்
சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு
எடுத்துக் காட்டப்பட்டது.

கலந்துரையாடல்

இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை,
சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல்
ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத்
திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார்.

பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதுவர் குழு இடையே சந்திப்பு | Prime Minister Harini Us Ambassadorial Team Meet

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின்
ஜனநாயகத்துக்கான பங்குடைமைக் குழுவின் பிரதிநிதிகள், நாடாளுமன்றத்துடன்
முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும்
டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச்
சுட்டிக்காட்டினர்.

பெண்களின் பங்களிப்பு 

இந்தக் கலந்துரையாடலின் போது நாடாளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும்
பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதுவர் குழு இடையே சந்திப்பு | Prime Minister Harini Us Ambassadorial Team Meet

இதன்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும்
சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்கும் கலந்து கொண்டார்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்