செலவிடப்பட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சு விரைவான கணக்காய்வு நடத்த வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சின் செலவுகள் குறித்த புள்ளி விவரங்கள் இருந்தாலும், அதன் முன்னேற்றம் குறித்து முறையான தணிக்கை தேவை என்றும், உள்ளக கணக்காய்வு விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொது நிதி விரயம்
அரசு என்ற வகையில், பொது நிதி விரயம் மற்றும் துஷ்பிரயோகம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால், பண்டிகைகளுக்கு விரயமாவதை குறைக்க அறிவுறுத்தினார்.