பொதுவாக டாப் ஹீரோக்களுக்கு நூறு கோடிக்கும் மேல் சம்பளமாக தரப்படுகிறது, ஆனால் ஹீரோயின்களுக்கு அதிக விட மிக மிக குறைவான தொகை தான் சம்பளமாக தரப்படுகிறது. அதை பற்றி பல நடிகைகளும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.
மேலும் நடிகைகளுக்கு வழங்கும் சம்பளத்தில் கூட பல்வேறு வேறுபாடுகள் இருக்கிறது. அவர்கள் எந்த அளவுக்கு பாப்புலர் ஆக இருக்கிறார்களோ அதை பொறுத்து தான் சம்பளம் பேசப்படுகிறது.
இந்திரஜா ரோபோஷங்கர் மகனுக்கு பெயர் வைத்த கமல்ஹாசன்! என்ன பெயர் தெரியுமா
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 6 வருடங்களாக எந்த விதமான இந்திய படங்களிலும் நடிக்கவில்லை. அமெரிக்காவில் கணவர் பாடகர் நிக் ஜோனஸ் உடன் செட்டில் ஆகிவிட்ட அவர் தற்போது மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
பிரியங்கா சோப்ரா அடுத்து ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக அவருக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுகிறதாம். இதன் மூலமாக இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் தீபிகா படுகோன் ஒரு படத்திற்கு சுமார் 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.