இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தின் மூலமாக உலக அளவில் பாப்புலர் ஆகிவிட்டார். அந்த படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதையும் வென்றது.
அடுத்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார்.
சுமார் 1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருடம் ஜனவரியில் தொடங்க இருக்கிறது.
ஹீரோயின்
இந்த படத்தின் ஹீரோயினாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட பிரியங்கா சோப்ரா இந்த படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.