பிரியங்கா மோகன்
தெலுங்கு சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா மோகன். அமைதியான முக பாவணை, அழகான தோற்றம் ஆகியவற்றின் காரணமாக தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.
தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த சரிபோதா சனிவாரம் படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
ஆனால், தமிழில் வெளியான பிரதர் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. சிவகார்த்திகேயன் ஜோடியாக டாக்டர், சூர்யா ஜோடியாக எதற்கும் துணிந்தவன் என பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.


‘என் இனிய தமிழ் மக்களே, இயக்குநர் பாரதிராஜா சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?
இவ்வளவா?
இந்நிலையில், பிரியங்கா மோகன் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளது.
அதன்படி, பிரியங்கா மோகன் ஒரு படத்திற்கு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரையில் சம்பளம் பெற்று வரும் நிலையில் அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.8 கோடி முதல் ரூ.10 கோடி வரை உள்ளது என்று கூறப்படுகிறது.

