மெர்சல்
தளபதி விஜய் – அட்லீ கூட்டணியில் உருவான திரைப்படம் மெர்சல். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்தனர்.
சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்க, தேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
ராஷ்மிகா, ஸ்ரீலீலா மார்க்கெட்டுக்கு ஆபத்து.. அடுத்த சென்சேஷனல் இந்த நடிகை தான்
பல கோடி பட்ஜெட் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ. 250 கோடி வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இப்படம் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம், அதனால் தான் அதன்பின் எந்த படத்தையும் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவில்லை என தொடர்ந்து பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
மெர்சல் படம் நஷ்டமா
இந்த நிலையில், மெர்சல் படம் நஷ்டம் என்கிற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி விளக்கம் கொடுத்துள்ளார்.
இதில் “நாங்கள் ஒரே நேரத்தில் ஒரு படம் மட்டும் நாங்கள் ஹீரோக்கள் இல்லை, நாங்கள் தயாரிப்பாளர்கள். ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்கள் பண்ணுவோம். அப்போது ஒரு படத்தினுடைய சுமை இன்னொரு படத்திற்கு போகும். நாங்க படம் கொடுத்த மட்டும் தான் நீங்கள் பாப்பீங்களா, யாரவது எங்களுடைய சகோதரர்கள் படம் கொடுத்துட்டு, தயாரிப்பாளர்கள் நல்ல entertainmnet கொடுத்துட்டு தான் இருக்காங்க. அதனால் தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசவேண்டாம். நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்”.
“மெர்சல் படம் எங்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சென்றது. நாங்க எவ்வளவு படம் எடுத்தாலும், மெர்சல் தயாரிப்பாளர்கள் என்று தான் அடையாளம் இருக்கிறது. விஜய் சாறுடன் வேலை பார்த்தது மிகவும் பெருமை” என கூறியுள்ளார்.