வாடிவாசல்
சூர்யா நடிப்பில் கடைசியாக கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது.
பெரிய பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றியடையும் என எதிர்ப்பார்க்கப்பட கடைசியில் மோசமான விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.
அடுத்து சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாக இருக்கிறது, இந்த நேரத்தில் தான் சூர்யா நடித்துள்ள இன்னொரு படத்தின் தகவல்கள் வந்துள்ளது.
வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் வாடிவாசல். இப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெற்றிமாறனும் நானும் சூர்யா தம்பியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தோம்.
தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?
வெற்றிமாறன், சூர்யா எந்தெந்த தேதியில் படப்பிடிப்பு வைத்துக் கொள்ளலாம் என ஆலோசனை செய்தனர், ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை கம்போஸ் செய்து ஒலிப்பதிவும் முடித்துவிட்டனர்.
அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம் என்று கலைப்புலி தாணு கூறியுள்ளார்.