மத்திய அரசிடம் இருக்கும் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டாம் என 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் திருத்தங்களுக்கான பிரேரணை ஒன்றை முன்வைக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த பிரேரணை தொடர்பில் செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தில் இவை குறிப்பிடப்பட்டுள்ளது.விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்ற சில துறைகளில் சட்டமியற்றும் அதிகாரமே வழங்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகளுக்கான அதிகாரம்
தான் வடமேல் மாகாண சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த போதும் அன்றிருந்த ஆளுநர் ஜனாதிபதியின் அதிகாரத்தில் தங்களை முழுமையாக இயங்க விடவில்லை.

ஆதலால் மாகாண சபையின் சரத்தின் பிரகாரம் அதன் வரம்புக்குள் இருக்கும் அதிகாரங்களை செயற்படுத்த வேண்டும்.பொதுவாக மத்திய அரசின் அதிகாரம் மற்றும் பொதுவான அதிகாரங்கள் என்ற அடிப்படையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை செயன்முறைப்படுத்தலாம்.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டு 11 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மாகாண சபைத் தலைவரின் பதவி அப்படியே இருக்கும்.அவருக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் மற்றும் நிதி ஒதுக்கங்களை அவர் அனுபவித்து கொண்டிருக்கிறார்.
அதனால் எவ்வித பயனும் இல்லை.மாகாண சபைகளுக்கான அதிகார வரம்புகளை வழங்கினால் வட-கிழக்கில் தனி இராச்சியம் அமைக்கப்படும் என சொல்லுகின்றனர்.
தமிழர் தரப்பின் கோரிக்கை
நான் மாகாண சபை முதலைச்சராக இருந்தால் அவ்வாறு செய்ய முடியாது.கடந்த காலங்களில் வரதராஜா பெருமாள் போன்றோரால் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களே இந்த நிலைமைக்கு காரணமாகும்.

வட-கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள் இனவாத கண்ணோட்டத்தில் நோக்கின்றனர் அதுவும் காரணமாகும்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு பழைய முறையான விகிதார முறையில் சிறு மாற்றங்களை செய்தால் போதும் .
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தலாம் என்பதே தமிழர் தரப்பின் கோரிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

