மாகாணசபை முறை இனியும் நாட்டுக்குத் தேவையில்லை என பிரதியமைச்சர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேவையில்லை
‘ஜனாதிபதி இருக்கின்றார், அமைச்சரவை இருக்கின்றது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், இது போதும். அதற்கு மேல் மாகாணசபை என்ற ஒன்று தேவையில்லை’ என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கான தேர்தல் கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக நடைபெற்றதன் பின் 2018ம்ஆண்டு அவற்றின் காலம் நிறைவுற்றது.

ஆளுநர்களின் நிர்வாகம்
கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை சகல மாகாணங்களும் மக்கள் பிரதிநிதிகள் இன்றி மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

