புஷ்பா 2
பான் இந்தியன் திரைப்படமாக உருவாகி, கடந்த வாரம் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது புஷ்பா 2. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் வெளிவந்த புஷ்பா 2, தொடர் வசூல் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 74ஆம் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
இயக்குநர் சுகுமார் இயக்கி இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தனர். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் இணைந்து நடித்திருந்தனர்.
வசூல் விவரம்
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. ஆம், புஷ்பா 2 வெளிவந்து 7 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1050 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
7 நாட்களில் ரூ. 1000 கோடியைக் கடந்து இதுவரை இந்திய திரைத்துறையில் எந்த ஒரு திரைப்படமும் செய்யமுடியாத வசூல் சாதனையை இப்படம் செய்து காட்டியுள்ளது. விரைவில் ரூ. 1500 கோடியை இப்படம் கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.