புஷ்பா 2
இந்த ஆண்டு தெலுங்கு திரையுலகில் இருந்து வெளிவந்த கல்கி திரைப்படம் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதன்பின், கடந்த வாரம் வெளிவந்த புஷ்பா 2 படமும் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் க்ளப்பில் இணைந்துள்ளது. அதுவும் ஆறே நாட்களில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் செய்யமுடியாத சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது.
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ரஜினியின் தளபதி திரைப்படம் மாஸ் வசூல்.. எவ்வளவு தெரியுமா
படத்தின் வெற்றி ஒரு பக்கம் இருந்தாலும், அல்லு அர்ஜுனின் கைது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள், சிறையில் இருந்து வெளிவந்துவிட்டார் அல்லு அர்ஜுன்.
வசூல்
உலகளவில் சக்கபோடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் தமிழகத்தில் 9 நாட்களில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 9 நாட்களில் ரூ. 57 கோடி வசூல் செய்துள்ளது.