புஷ்பா 2
கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ்.
பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் பாக வெற்றி தற்போது 2ம் பாகம் உருவாகியுள்ளது.
படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் புரொமோஷன் வேலைகளும் மாஸாக நடந்து வருகிறது.
ப்ரீ புக்கிங்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் விவரங்கள் வெளியாகிறது.
ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இப்படம் உலகம் முழுவதும் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.