புஷ்பா 2
பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு, மகனின் நிலைமை.. சோகமான தகவல்
மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கண்டிப்பாக வசூல் சாதனை படைக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில், முதல் நாள் உலகளவில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் புஷ்பா 2 வசூல் செய்துள்ளது.இந்த சினிமாவில் இதுவரை எந்த படமும் முதல் நாள் ரூ. 275 கோடி வசூல் செய்ததே இல்லை. இதன்மூலம், முதல் நாள் அதிக வசூல் செய்த இந்திய படம் என்கிற சாதனை புஷ்பா 2 படைத்துள்ளது.