புஷ்பா 2
கடந்த 5ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படம் முதல் நாள் தனது வசூல் வேட்டையை பிரம்மாண்டமாக துவங்கியது. இதுவரை வெளிவந்த எந்த ஒரு இந்திய திரைப்படமும், செய்யமுடியாத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.
புஷ்பா 2க்கு ஆதரவாக வந்த ஜான்வி கபூர்.. என்ன கூறி இருக்கிறார் பாருங்க
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த புஷ்பா 2 முதல் நாளே உலகளவில் ரூ. 275 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. முதல் நாள் வசூலில் மாபெரும் சாதனை படைத்த புஷ்பா 2 படம், இரண்டு நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதை பற்றி பார்க்கலாம்.
வசூல்
முதல் நாள் ரூ. 275 கோடி வசூல் செய்திருந்த இப்படம், இரண்டாவது நாளில் ரூ. 130 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 405 கோடிக்கும் மேல் புஷ்பா 2 படத்தின் வசூல் வந்துள்ளது.
கண்டிப்பாக இப்படம் ரூ. 1000 கோடியை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் 2024ஆம் ஆண்டின் மாபெரும் வசூல் சாதனை படைத்த படமாக புஷ்பா 2 மாறுகிறதா என்று.