முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடின் முன்வைத்துள்ள திட்டம்

போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைனில் (Ukraine) தற்காலிக நிர்வாகம் அமைக்க வேண்டும் என ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பரிந்துரை செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்மூலம் உக்ரைனில் புதிய தேர்தல்களை நடத்தி, முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என புடின் தெரிவித்துள்ளார்.

மர்மன்ஸ்க் (Murmansk) நகரத்தில் கடலோரப்படை வீரர்களுடன் பேசியபோது, உலக நாடுகள் இணைந்து இந்த தாற்காலிக நிர்வாகத்தை அமைக்கலாம் என புடின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் அரசு

ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் கூட்டாளி நாடுகள் இணைந்து ஒரு தற்காலிக நிர்வாகத்தை உருவாக்கலாம் என்றும், பின்னர் உக்ரைனில் ஜனநாயக தேர்தல் நடத்தி, மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சியை அமைத்து, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் குறித்து பேசலாம் என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடின் முன்வைத்துள்ள திட்டம் | Putin Plan To End Ukraine War Revealed

இந்தநிலையில், இதற்கு உக்ரைன் அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் தீர்வு

அத்தோடு, இப்போருக்கு விரைவில் தீர்வு காண அவர் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர புடின் முன்வைத்துள்ள திட்டம் | Putin Plan To End Ukraine War Revealed

இருப்பினும், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் நிர்வாகம் அந்நாட்டின் அரசியல் சட்டத்தின்படி மக்கள் தான் தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்