இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) வடகொரியாவிற்கு சிங்கம் மற்றும் இரண்டு கரடிகள் உட்பட 70 க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசளித்துள்ளார்.
குறித்த விலங்குகள் சரக்கு விமானம் மூலம் வட கொரிய தலைநகருக்கு புடினின் சுற்றுச்சூழல் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ் கொண்டு சென்றுள்ளார்.
உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட வட கொரியா ஆயிரக்கணக்கான துருப்புக்களை அனுப்பியது.
அமெரிக்க ஆயுதங்கள்
இந்த நிலையில், ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க ஆயுதங்களை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கியமையடுத்து, ரஷ்யாவுடனான மோதல் நிலை வலுப்பெற்று வருகிறது.
இதேவேளை, உக்ரைனுடனான போரில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா நேரடியாக செயற்பட்டு வருவதாக புடின் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
வடகொரிய – ரஷ்ய உறவு
இவ்வாறானதொரு பின்னணியில், வடகொரியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் விளாடிமிர் புடின் தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறார்.
அத்தோடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில், வட கொரியாவால் வழங்கப்பட்ட பீரங்கி குண்டுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னிற்கு 24 வெள்ளை இனக் குதிரைகளை புடின் பரிசாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.