ஈரான் (Iran) மீதான அமெரிக்க (America) தாக்குதல்களுக்குப் பிறகு பேரழிவு விளைவுகள் குறித்து கத்தார் (Qatar) அச்சம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனைக் குறிப்பிட்டு, மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளத்தின் புரவலரான கத்தார், இந்த தாக்குதலுக்குப் பிறகு பேரழிவு விளைவுகள் ஏற்படும் என்று அஞ்சுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வெளியுறவு அமைச்சகம்
இது தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் (ministry of foreign affairs) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிராந்தியத்தில் தற்போதைய ஆபத்தான அதிகரிப்பு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
இராணுவ நடவடிக்கை
அனைத்து தரப்பினரும் ஞானம், கட்டுப்பாடு மற்றும் அதிகரிப்பைத் தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நிலுவையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்க, அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டு உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை கத்தார் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

