ராஷி கன்னா
இமைக்கா நொடிகள், அரண்மனை, அயோகிகா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷி கன்னா. இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல ஃபேன்பேஸ் உள்ளது.
படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வாரம் தெலுசு கடா எனும் திரைப்படம் தெலுங்கில் வெளிவந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ராஷ்மிகாவின் ‘தம்மா’ திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ
பவன் கல்யாண் படம்
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷனில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ‘உஸ்தாத் பகத் சிங்’ படம் குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் தனது திரையுலக வாழ்க்கையில் முதல் முறையாக கதை கேட்காமலேயே உஸ்தாத் பகத் சிங் படத்திற்கு ஓகே சொன்னதாக கூறினார்.
மேலும், பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்க தான் எப்போதும் விரும்புவதாகவும், ஹரிஷ் சங்கர் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிக்க வாபலித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார்.