நடிகை ராதிகா ஆப்தே ஹிந்தி மட்டுமின்றி பல தென்னிந்திய படங்களிலும் நடித்து இருக்கிறார். தமிழில் அவர் கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரஜினி உடன் கபாலி போன்ற சில படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார்.
ராதிகா ஆப்தே தற்போது அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமாவை பற்றி அதிர்ச்சி புகார் ஒன்றை கூறி இருக்கிறார்.

அந்த இடத்தில் padding..
“நான் பணத்திற்காக தான் தென்னிந்திய படங்களில் நடித்தேன். அங்கு செட்டில் இருப்பதே எனக்கு ரொம்ப கடினம். எனக்கு நினைவிருக்கிறது, ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நான் மட்டுமே பெண், மற்ற எல்லோரும் ஆண்கள்.”
“அவர்கள் என்னுடைய மார்பகம் மற்றும் பின்புறம் padding வைத்து பெரிதாக மாற்ற சொன்னார்கள். இன்னும் எவ்வளவு வைப்பது என நான் கோபமாக கேட்டேன். எனக்கு மேனேஜர் இல்லை, ஏஜென்ட் இல்லை, எனக்கென தனி டீம் வரக்கூடாது எனவும் கண்டிஷன் போட்டார்கள்” என ராதிகா ஆப்தே கூறி இருக்கிறார்.


