முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்குமாறு கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி(Rahul Gandhi) கடிதம் எழுதியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியியட்டுள்ளன.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இந்தியாவின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை ஜனாதிபதியிடம் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தவும் அவர் கோரியுள்ளார். 

ராகுல் காந்தி எழுதிய கடிதம்

அத்துடன், மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றுவதால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், குறித்த மீன்பிடி படகுகளை மீட்க இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். 

கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை இரத்து செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரம்: ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் | Rahul Gandhi Letter To Jaishankar

இதனிடையே, இலங்கை சிறைகளில் 141 தமிழக கடற்றொழிலாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தெரிவித்துள்ளார்.
அதில் 96 பேர் தண்டனை பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் 198 படகுகளையும் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியுள்ளதாக இந்திய அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.