முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலை காப்பாற்றும் நடவடிக்கையில் குடும்ப உறுப்பினரை கைவிட்ட ராஜபக்ச குடும்பம்

ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக அணி திரண்ட நிலையில் தங்கள் குடும்ப உறுப்பினரை மறந்துளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்சவை நலன் விசாரிக்க ஒருவர் கூட சிறைச்சாலைக்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் மகனான சஷேந்திர ராஜபக்ச நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பம்

மகிந்த ராஜபக்சவின் முதல் ஜனாதிபதி பதவிக் காலத்தில் அவர் முதலில் அரசியலில் ஈடுபட்டார். நமல் ராஜபக்ச அரசியலில் ஈடுபட்ட பிறகு, ஷஷேந்திர ராஜபக்ஷவுக்கு ‘மாற்றாந்தாய் பராமரிப்பு’ வழங்கப்பட்டது.​​

ரணிலை காப்பாற்றும் நடவடிக்கையில் குடும்ப உறுப்பினரை கைவிட்ட ராஜபக்ச குடும்பம் | Rajapaksa Family Forgot Family Member

ராஜபக்ச குடும்பமும் பொதுஜன பெரமுன கட்சியும் ரணில் விக்ரமசிங்கேவை காப்பாற்றும் பணியில் இணைந்து செயற்பட்டனர்.

சமல் ராஜபக்சவும் ராஜபக்சே குடும்பத்திலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார் என்பது சமீபத்திய செயல்பாடுகளில் தெரியவந்துள்ளதென தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஊழல் மோசடி

சஷேந்திர ராஜபக்சவை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக மகிந்த ராஜபக்ச கோயில்கள், தேவாலாயங்கள் மற்றும் கிராமங்கள் சட்டத்தை கூட மாற்றினார். அதன் பிறகு, ராஜபக்ச குடும்ப விவகாரங்களுக்காக கரிம உரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ரணிலை காப்பாற்றும் நடவடிக்கையில் குடும்ப உறுப்பினரை கைவிட்ட ராஜபக்ச குடும்பம் | Rajapaksa Family Forgot Family Member

இது தொடர்பான அனைத்து பொறுப்புகளும் ஷஷேந்திர ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன்போது பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக சஷேந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மகாவலி நிலத்தில் கட்டப்பட்ட தனது அரசியல் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் அழித்ததற்காக போலியாக தெரிவித்து, அதற்காக 8,850,000 ரூபாவை நட்டஈடாக அரச நிதியை பெற்றுக்கொண்டதாக சஷீந்திர ராஜபக்ஷ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.