முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படும் போது அவருக்கு ஆதரவாக திரண்டு கூச்சலிட்ட கூட்டம், பொருளாதார குற்றவாளியான ராஜபக்சர்கள் கைது செய்யப்படும் போது என்ன செய்வார்கள் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படும் போது, அவருக்கு ஆதரவாக திரண்ட அரசியல்வாதிகள், அதனை ஒரு அரசியல் பழிவாங்கலாக கருதினர்.
இவ்வாறிருக்க, ராஜபக்சர்களை, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான குற்றவாளிகள் என முன்னதாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அவர்கள் கைது செய்யப்படும் போது, அவர்களுக்காகவும் ஒரு கூட்டம், கத்தி கூச்சலிட வாய்ப்புள்ளது என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ராஜபக்சர்கள் கைது செய்யப்பட உள்ளனர் என்ற இரகசியத்தை சுனில் ஹந்துன்நெத்தி உடைத்துள்ளார் என பல்வேறு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இப்படிக்கு அரசியல் நிகழ்ச்சி,