சிவாஜி கணேசன்
நடிப்புக்கு உதாரணமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடன் நெருங்கி பழகிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரும் இணைந்து படையப்பா படத்தில் நடித்திருந்தனர்.

தந்தை – மகனாக இவர்கள் இருவரும் நடித்தது படையப்பா படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றது.
மேலும் படையப்பா படத்திற்காக சிவாஜி கணேசன் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கினார்.

அப்படத்தின் தயாரிப்பாளரிடம் சொல்லி சிவாஜி அவர்களுக்கு இவ்வளவு பெரிய சம்பளத்தை தர சொன்னதே ரஜினிதான். இப்படி பல நேரங்களில் சிவாஜியுடன் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் ரஜினி.
மனம் உடைந்து பேசிய ரஜினி
இந்த நிலையில், படையப்பா ரீ ரிலீஸ் குறித்து வீடியோ ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் அவர்கள் குறித்து மனம் உடைந்து பேசியது படுவைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது, “நான் இறந்துபோனா என் உடம்பு கூடயே நீ வருகிறாயாடா என்று சிவாஜி சார் என்னிடம் கேட்டார். சிவாஜி சார் இறந்ததற்கு பின் அவரின் உடல் வைத்திருந்த வாகனத்தில் கடைசி வரை போனேன்” என்றார் ரஜினி.


