பராசக்தி
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப், ராணா டகுபதி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. விரைவில் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.

ஆறு நாட்களில் தேரே இஷ்க் மே படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இசை வெளியீட்டு விழா
ஜனவரி மாதம் 14ஆம் தேதி பராசக்தி படம் வெளிவரவிருக்கும் நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ஜனவரி மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

