படையப்பா படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரீரிலீஸ் ஆகிறது. அதற்காக ரஜினி தற்போது அளித்து இருக்கும் பேட்டி வைரல் ஆகி இருக்கிறது.
படையப்பா படத்தின் கதையே தன்னுடையது தான் என்றும், நண்பர் பெயரில் அவரே தயாரித்ததாகவும் தெரிவித்து இருக்கிறார் ரஜினி.
நீலாம்பரி ரோலில் முதலில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க ரஜினி விரும்பிய நிலையில், அவர் மறுத்ததால் இறுதியில் ரம்யா கிருஷ்ணனை நடிக்க வைத்ததாகவும் கூறி இருக்கிறார்.

அதிக சம்பளம் கேட்ட சிவாஜி
அப்பா ரோலில் சிவாஜியை நடிக்க வைக்கலாம் என கே.எஸ்.ரவிக்குமார் கூறிய நிலையில், வேண்டாம் என ரஜினி என முதலில் கூறினாராம். ஏனென்றால் படத்தில் அவருக்கு மிக குறைவான காட்சிகள் தான் இருக்கும், அதனால் தான்.
அதன் பின் கே.எஸ்.ரவிகுமார் சிவாஜியிடம் சென்று கதை சொல்லிவிட்டு வந்தபின், ரஜினியிடம் சிவாஜி ஒரு மிகப்பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாக கூறி இருக்கிறார். அது பெரிய தொகை, அதனால் வேண்டாம் என ரவிகுமார் சொன்னாராம்.
அவ்வளவு பெரிய நடிகரிடம் சென்று கதை சொல்லி, அவரும் ஓகே சொன்னபிறகு, வெறும் சம்பளத்திற்காக அவரை வேண்டாம் என சொன்னால் சரியாக இருக்காது என சொன்ன ரஜினி, மறுநாளே சிவாஜி வீட்டுக்கு சென்று அந்த தொகையை ஒரே பேமண்ட் ஆக கொடுத்து படத்திற்கு புக் செய்து விட்டு வந்தாராம்.


