ரஜினியின் கூலி
நாளை தமிழகம் முழுவதும் திருவிழா தான், சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி திரைப்படம் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் லியோ பட வெற்றியை தொடர்ந்து இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
ரஜினி பட ரிலீஸ் என்றாலே எதிர்ப்பார்ப்பு இருக்கும், அதிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.
வழக்கம் போல் நிறைய தனியார் கம்பெனிகள் கூலி பட ரிலீஸிற்காகவே விடுமுறை எல்லாம் விட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
போட்டோ
படத்தின் முன்பதிவிலேயே ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
நாளை ஆகஸ்ட் 14, இப்படம் இந்தியா முழுவதும் 4500 முதல் 5000 திரைகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
படத்தை காண ரசிகர்கள் கொண்டாட்டத்தில் குதித்துள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் இல்லை என தெரிகிறது. அதாவது அவர் பெங்களூர் சென்றுள்ளாராம், அங்கு இருக்கும் ரஜினியின் போட்டோ இதோ,