விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இன்று (09) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு செல்வதற்கு தடை
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.