ராம் சரண்
ஆந்திராவில் பிறந்த இசையமைப்பாளரும், நடிகருமான தமன், பழம்பெரும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான கண்டசாலா பாலராமய்யாவின் பேரன் ஆவார்.
இவருடைய தந்தை கண்டசாலா சிவகுமார் டிரம்ஸ் இசை கலைஞர் ஆவார். தெலுங்கில் 2009ம் ஆண்டு மல்லி மல்லி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்கிய தமன், தொடர்ந்து நிறைய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கடைசியாக கேம் சேஞ்சர் படத்தை இசையமைத்துள்ள இவர் இப்படத்தின் தோல்விக்கு நடன இயக்குநர்கள் தான் காரணம். சரியான நடன அசைவுகளை அமைக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.
என் மகன் என்பதால் சேர்க்கவில்லை.. தனுஷ் தந்தை சொன்ன ரகசியம்
அன்பாலோ
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகன் ராம் சரண், தமனை இன்ஸ்டா தளத்தில் அன்பாலோ செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமனின் இந்த கருத்தால் படக்குழுவினர் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.