முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில், பாக் வளைகுடாவில் நீடித்து வரும் கடற்றொழிலாளர் மோதலுக்கு இந்திய தரப்புகள் இழுவை முறையை பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடங்களாக கடற்றொழிலாளர் பிரச்சினை முக்கிய இராஜதந்திரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த வாரம் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரத உட்கொள்ளல் குறைவு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து இனக்குழுக்கள் மற்றும் புவியியல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர் | Ramalingam Chandrasekar On Fishermen Issue

எனவே, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமது கட்சிக்கு உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் 17.2 கிலோவாக இருந்த நாட்டின் தனிநபர் மீன் நுகர்வு இப்போது 11.07 கிலோவாகக் குறைந்துள்ளது. இது மக்களின் புரத உட்கொள்ளல் குறைவதைப் பிரதிபலிக்கிறது.

குடும்ப உறவுகள்

இந்தநிலையில், ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய, இலங்கையின் கடல் மற்றும் நமது கடல் பல்லுயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர் | Ramalingam Chandrasekar On Fishermen Issue

இதேவேளை, இலங்கையின் பலருக்கு இன்னும் தமிழ்நாட்டில் குடும்ப உறவுகள் உள்ளன.

எனவே, கடற்றொழில் பிரச்சனையில் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்திய மற்றும் தமிழக மக்களையும் அரசாங்கங்களையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.