வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலை அரசாங்கத்திற்கு நடத்த முடியாமல் போகும் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கூட்டு நம்பிக்கையில்லா பிரேரணை இன்று(12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சென்றிருந்த அர்ச்சுனா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு அரசியல் தொடர்பில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பல காரணங்களை சுட்டிக்காட்டி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சுட்டிக்காட்டிய காரணங்கள்
அரசாங்கம் உள்ளுராட்சி தேர்தலிலே வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் உருவச்சிலையை நிறுவுவதாகவும் தலைவரின் அம்மாவின் பெயரில் இறங்குதுறை அமைப்பதாகவும் வாக்குறுதி அளித்தது.
வாக்குகளை பெற்றுக் கொள்வே அரசாங்கம் இவ்வாறான பொய்களை கூறியதாக மக்களுக்கு தெரியும்.
அது மட்டுமல்ல அமைச்சர் ஒருவர் வடக்கில் காலணியை கழற்றி விட்டு ஓடிய சம்பவம் ஒன்று அண்மையில் நடந்தது.
இவை வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகும்.அரசாங்கம் இவ்வாறு பொய் வாக்குறுதிகளை வழங்கினால் தெற்கிலும் மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.