Jodi Are You Ready
நடன நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவி தான், இதனை யாருமே மறுக்க மாட்டார்கள்.
இப்போது ஜோடி ஆர் யூ ரெடி என்ற பெயரில் புத்தம் புதியதாக நடன நிகழ்ச்சி நடந்து வருகிறது. முதல் சீசன் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது.
2025, இந்த வருட ஆரம்பத்தில் ஜனவரி மாதம் ஜோடி ஆர் யூ ரெடி 2வது சீசன் தொடங்கப்பட்டது.
இந்த 2வது சீசன் வெற்றியாளராக அபினவ் மற்றும் ராணி குமாரி ஜோடி ஆர் யூ ரெடி பட்டத்தை வென்றுள்ளார்களாம்.

ரம்பா கணவர்
ஜோடி ஆர் யூ ரெடி 2வது சீசன் பைனல் நிகழ்ச்சி இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியின் புரொமோக்கள் வெளியாக அதில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்துள்ளது.

அதாவது தனக்கு ஒரு கை இல்லை என்றாலும் தன்னம்பிக்கையுடன் இந்த போட்டியில் கலந்துகொண்ட ஆதிராவிற்கு செயற்கை கை பொறுத்துவதற்காக உதவி செய்துள்ளார் நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன். இதோ புரொமோ,
Source: https://cineulagam.com/article/rambha-husband-nice-gesture-to-contestant-1746330838

