முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேல் வசமான ஈரானிய தொலைக்காட்சி சனல்கள்: ஒளிபரப்பாகும் அதிர்ச்சி காணொளிகள்

புதிய இணைப்பு

தங்கள் தொலைக்காட்சி சனல்களை ஹேக் செய்து, பெண்கள் போராட்ட காட்சிகளை ஒளிபரப்பி, மக்களை வீதிக்கு வருமாறு இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளதாக ஈரான் குற்றாஞ்சாட்டியுள்ளது.

ஈரானிய மக்களுக்கு எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரச தொலைகாட்சி, செயற்கைக்கோள் ஒளிபரப்பை சீர்குலைக்கும் சியோனிச எதிரியால் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களால் இது ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

ஈரானின் சில தொலைக்காட்சி சனல்களில் திடீரென அந்நாட்டு அரசுக்கு எதிரான பரப்புரைகளுடன் கூடிய காணொளிகள் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றில் பொதுமக்கள் வீதியில் இறங்கி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற அழைப்புகள் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த தொலைக்காட்சி சனல்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

யார் காரணம்?

இந்த நடவடிக்கைக்கு பின்னால் யார் இருப்பது என்பது உறுதி செய்யப்படவில்லை என்பதுடன், செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புகளைப் பெறும் சனல்கள் மட்டுமே இவ்வாறு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால், உள்நாட்டு ஒளிபரப்புகள் மற்றும் நிலையான இணையவழி சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களை குரல் எழுப்புமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இவ்வாறு சனல்கள் ஹெக் செய்யப்பட்டு அரச எதிர்ப்பு பிராசாரங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றமை பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இணையதளங்களுக்கு  தடை

இதேநேரம், இணையதளங்களுக்கு மீண்டும் தற்காலிக தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்களின் உயிரும் சொத்தும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் எதிரியின் தகவல் தாக்கங்களை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.