முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசாங்கத்திற்கு ரணில் கூறும் அறிவுரை

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினருடன் கலந்துரையாடி உரிய தீர்வை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட காணொளியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களின் கோரிக்கைக்கமைய தேசிய இளைஞர் சேவை மன்றத்தை நான் நிறுவினேன்.

இதன் மூலம், இளைஞர்களின் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அவர்களின் கலைத் திறனை ஊக்குவிப்பதே எமது எதிர்பார்ப்பாக இருந்தது.

மன்றத்தின் எதிர்காலம்

இந்த நடவடிக்கை வெற்றி பெற்றதையடுத்து, இளைஞர்கள் சமூகத்தில் பங்கெடுக்க ஆரம்பித்தனர்.

இளைஞர் சேவை மன்றத்தில் இருந்த இளைஞர்கள், பல்வேறு கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளாக சென்றனர்.

அரசாங்கத்திற்கு ரணில் கூறும் அறிவுரை | Ranil Advises Government

இவர்கள் அனைவரும் இளைஞர் சேவை மன்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல உறுதுணையாகவும் உள்ளனர்.

எனினும், அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்த சட்டங்கள் இளைஞர் சேவை மன்றத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடக்க இருப்பதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.

இவ்வாறு சென்றால், தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் எதிர்காலம் கேள்விக்குட்படுத்தப்படும்.

அறிவுரை

இது அரசியல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட திருத்த சட்டம் என ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு ரணில் கூறும் அறிவுரை | Ranil Advises Government

இந்த பிரச்சினையை நீண்ட தூரம் கொண்டு செல்லமால் உடனே தீர்வு காண்பது நல்லது.

இது தொடர்பில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினருடன் கலந்துரையாடி இரு பக்கத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் உரிய தீர்வை அரசாங்கம் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்