முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்கு பல அரசியல் தரப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேவேளை, இந்த கைதுக்கு ஆதரவு தெரிவித்தும் பலர் கருத்துக்களை முன்வைத்து வருவதுடன் அநுர அரசாங்கத்தை பாராட்டவும் செய்கின்றனர்.
அது மாத்திரமன்றி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இந்தியாவில் இருந்து, ஏன் இவ்வாறான ஒரு கைதினை மேற்கொண்டீர்கள் என்றவாறு மறைமுகமாக அழுத்தம் கொடுப்படுவதாகவும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.
உண்மையிலேயே இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு பெரிய நிகழ்வாக பதிவாகியிருக்கின்றது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது.
சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலை மிக மோசமடைந்து வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதுவும் ஒரு அரசியல் நாடகம், இவ்வளவு நாட்கள் இல்லாத நோய்கள் இப்போது எங்கிருந்து வந்தன என்னும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
இவ்விடயம் தொடர்பில் உற்றுநோக்குகின்றது ஐபிசியின் அதிர்வு நிகழ்ச்சி,

