நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தல்
தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கட்சியின் நிறுவுநர் பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையில் ஒவ்வொரு வாரமும்
இடம்பெற்று வரும் சந்திப்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதியின் சார்பில் மேலும் பல
அரசியல்வாதிகள் கலந்து கொண்டமையே இந்தக் குழப்பத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
வாய்த்தர்க்கம்
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர
அபேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர். இதை பசில் விரும்பவில்லை.
இந்தச் சந்திப்பில் பசிலுக்கும் பிரசன்னவுக்கும்
இடையில் வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.
இதனால் அடுத்த சந்திப்பு இடம்பெறுமா என்பது சந்தேகமே. அப்படி இடம்பெற்றாலும்,
வழமைபோல் பசிலும் ரணிலும் மாத்திரமே கலந்து கொள்ள வேண்டும் என்று பசில் தரப்பு
தெரிவித்துள்ளது.