முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் அணிகள் கூட்டாக இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையில் கொழும்பில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிவிப்பு திகதி
இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன.
அதன் படி, இது தொடர்பான தகவல் எதிர்வரும் 27 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.