முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தலில் எனது வெற்றி உறுதி: மார்தட்டும் ரணில்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றியை பிரசாரங்களில் கலந்துகொள்ளும்
மக்களின் பெரும் கூட்டம் உறுதிப்படுத்தி வருகின்றது என்று ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று (16.09.2024) திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’
பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“நாங்கள் வெற்றி பெறுகின்றோம்! இந்தப் பெரும் கூட்டத்தைப் பார்த்தால் எமது
வெற்றி உறுதியாகின்றது. இந்த வாரம் நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக
முக்கியமான தேர்தலை எதிர்கொள்கின்றீர்கள்.

அரசியல் இலக்குகள்

நாம் வளமான, நிலையான நல்ல வாழ்க்கை வாழப் போகின்றோமா அல்லது வரிசை
யுகத்திற்குத் திரும்பப் போகின்றோமா என்பதை இது தீர்மானிக்க வேண்டும். நாட்டை
மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்லும் தவறைச் செய்ய வேண்டாம் என்று
மக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக கடந்த இரண்டு வருடங்களில் நாம்
முன்னெடுத்த வேலைத்திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் எனக்கு
வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் நான் ஆட்சியை ஏற்றேன்.

தேர்தலில் எனது வெற்றி உறுதி: மார்தட்டும் ரணில் | Ranil Confident About His Victory

இந்நாட்டு
மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ,
அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள்
வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய மக்களை தியாகம்
செய்ய விரும்பினர்.

மக்களைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் என்னுடன் இணைந்தனர். நாம் அனைவரும்
ஒன்றிணைந்து இரண்டு வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை
மீட்டெடுத்தோம். 2025ஆம் ஆண்டில் மக்களின் வாழ்க்கைச் சுமையை இலகுவாக்க
முடியும்.

ஒரு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது, பொருளாதாரத்தை மீண்டும்
கட்டியெழுப்ப சுமார் 5 வருடங்கள் ஆகும்.

தப்பித்து ஓடிய தலைவர்கள்

ஆனால், இரண்டு வருடங்கள் என்ற குறுகிய
காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிக விரைவாக மீட்டோம். நாட்டைக்
கட்டியெழுப்பும் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு காலப்பகுதியில் அதன்
வித்தியாசத்தை மக்கள் காணலாம்.

நாங்கள் இன்னும் தொங்கு பாலத்தில் இருக்கின்றோம்.

இன்னும் கொஞ்ச தூரம் பயணிக்க
வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்தப் பயணத்தை நிரந்தரமாக்க வேண்டும். தப்பித்து
ஓடிய இருவர் உள்ளனர். அவர்களிடம் திட்டம் இல்லை.

தேர்தலில் எனது வெற்றி உறுதி: மார்தட்டும் ரணில் | Ranil Confident About His Victory

நாட்டைப் பற்றிய
தொலைநோக்குப் பார்வை இல்லை. வரிகளைக் குறைப்பதாகச் சொன்னாலும் அதற்கான
அதிகாரத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறவில்லை. அதனால்தான் மக்கள்
முன் பொய் சொல்கிறார்கள்.

தப்பித்து ஓடிய தலைவர்களை நம்ப முடியாது.

தப்பித்த இருவரினாலும்
நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. எனவே, செப்டெம்பர் 21ஆம்
திகதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை
தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.