ராஜபக்சக்கள், சிறிலங்கா பொதுஜன முன்னணி கட்சியை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickramasinghe) ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரட்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதற்கு மொட்டு கட்சியின் ஆதரவினை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார கொலையாளிகள்
அத்தோடு, ராஜபக்சவினர் தேர்தல் பிரச்சாரப் பணிகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனுடன், மொட்டுக் கட்சியின் பொருளாதார கொலையாளிகள் என சிலர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான நபர்களுடன் இருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்மறையானதாக அமையக் கூடுமெனவும் இந்த விடயத்தை தாம் ரணிலிடம் கூறிள்ளதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.