தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மகா சங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி, (Narahenpita) இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.
வட – கிழக்கு அபிவிருத்தி
அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்துள்ளார்.
அதன்போது வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் வண, வாந்துவே தம்மாவங்ச தேரர், பிரதி நீதிச் செயலாளர் வண, ஹால்பன்வில பாலித தேரர், கொழும்பு பிராந்திய சங்க சபையின் தலைவர் வண, சூரியவெவ ஹேமாநந்த தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.