ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
(Ranil
Wickremesinghe) எதிர்வரும் 26 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை
ஆற்றவுள்ளார்.
தேர்தல்களை முன்னிட்டு இலங்கையின் (Sri Lanka) அரசியல் களம் சூடுபிடித்துள்ள
நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இந்த உரையை ஆற்றவுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும்
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது
மக்களுக்கு அவர் தெரியப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விசேட உரையின்
போது, இலங்கை மக்களுக்கு பல நிவாரணங்கள் கிடைக்கும் என ஐக்கிய தேசியக்
கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake)
தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..