கட்சித் தலைமையைப் பொருட்படுத்தாமல், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார்.
கடுவலையில் உள்ள ஜக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்க
இந்த நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
“இந்த இணைவு நாட்டிற்கு ஒரு நல்ல வாய்ப்பு. 1991 ஆம் ஆண்டு பதவி நீக்கம் காரணமாக கட்சி இரண்டாகப் பிரியவிருந்தது.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவைப் கட்சியை பாதுகாத்து முன்னேறும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
தலதா அதுகோரலவின் சகோதரரும் அப்போது தனக்கு உதவினார். , இப்போது தலதா அதுகோரல அனைத்துக் கட்சிகளுடனும் பேசி ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றார்.