பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, அதிபர் ரணில் விக்ரமசிங்க, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ச மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை, அண்மையில் சந்தித்துள்ளார்.
அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு, அரசியல் பணிகளை எதிர்வரும் மே தினத்துக்கு பின்னர், தீவிரப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
கூட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொண்டார்.
மேலும், அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, திரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் இதில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மாலைதீவு தேர்தல்: இந்தியாவுக்கு மற்றுமொரு பேரிடி
அதிபர் தேர்தல்
ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தி அதிபரின் பணிமனையின் பிரதானி சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டுள்ளார்.
இதன்படி அதிபரின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்தனியாக மே தினப் பேரணிகளை நடத்துவதற்கும் அதன் பின்னர் அதிபர் தேர்தலைக் கருத்திற்கொண்டு ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிக்கு இணைவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிபர் இம்முறை பொது வேட்பாளராக, உத்தேச கூட்டணி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவார். இந்தநிலையில், அனைத்து கட்சிகளும் குழுக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சின்னத்தில் புதிய கூட்டணியை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: வங்கிக் கணக்குகளுக்கு வரவுள்ள பணம்
புதிய கூட்டணி
அத்துடன் ஜூன் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணையை நாடு பெற்ற பிறகு, தேர்தலை இலக்காகக் கொண்டு அதிபர் பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் புதிய கூட்டணியை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும மற்றும் பிவித்துரு ஹெல உறுமய தலைமையிலான அரசியல் குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |