முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபி நிகழ்வில் பங்கேற்ற ரணில்

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள்
என்பவற்றை வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பங்களிப்புடன் நடைபெற்றது.

இலங்கையின் நான்காவது பெரிய தூபிகளில் ஒன்றான தீகவாபியை புனரமைக்கும் பணிகள்
2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

புனரமைக்கும் பணிகள்

மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்கவினால் தீகவாபி தூபியில் புனித தாது வைக்கப்பட்டதோடு அந்த
சமயத்தில் விமானப் படையினர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

ranil-participated-in-the-historic-event-

இதன்போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல்
கமல் குணரத்ன, கிழக்கு மாகாணத்தின் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாப்பதற்காக
நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் கீழ் தீகவாபி தாது கோபுரம் மற்றும் முகுது
மகா விகாரையை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

ranil-participated-in-the-historic-event-

“தீகவாபி அருண நிதியம்” என்ற பெயரில் ஒரு நிதியத்தை நிறுவி நிதி
சேகரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர் தாது கோபுரம் 62.3 அடி உயரத்துக்கு
நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியதோடு
பக்தர்கள் வழங்கிய தாராளமான ஆதரவும் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், மல்வத்து அங்கும்புரே பிரேமவன்ச
தேரர், கிழக்கு மாகாண பிரதி பிரதான சங்க நாயக்க தேரர், ரஜமகா விகாராதிபதி மகா ஓயா சோபித தேரர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,
பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, முப்படைகளின் பிரதானி
ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பெருந்திரளான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.