எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்சவிடம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்புக்கு பின்னர் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக்கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் தொடர்பில் மே தினத்தில் அறிவிப்பு..!
ஜனாதிபதி தேர்தல்
கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பசில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என பசில் ராஜபக்சவிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பதவியை பொறுப்பேற்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு அழைத்த ரணிலுக்கு நன்றி தெரிவித்த ஈரான் ஜனாதிபதி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |