2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச (Sajith Premadasa) களமிறங்கியது முதல் நண்பர்களாக இருந்த
சஜித் பிரேமதாச மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் பகைவர்களாக மாறினர்.
சஜித்தின் வெற்றிக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவான தரப்பினர் உழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான் ரவி கருணாநாயக்க.
2019ஆம் ஆண்டின் பின்னர் ரவி கருணாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவின் நட்பில் விரிசல்கள் ஏற்பட்டிருந்ததுடன்,
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சஜித் முன்வைத்திருந்த சில கருத்துகள் ரவி கருணாநாயக்கவை கோபத்துக்கும் உட்படுத்தியிருந்தது.
என்றாலும் புதிய நாடாளுமன்றம் ஆரம்பமானதன் பின்னர் இவர்களின் நட்பில் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற கேன்டீனில் இருவரும் நட்பு பாராட்டிக்கொண்டுள்ளனர்.
இருவரும் ஒரே மேசையில் அமர்ந்து நீண்ட நேரம் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடி உள்ளதாகவும் தெரியவருகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு ஐபிசி தமிழின் மதிய நேர செய்திகளை காண்க…
https://www.youtube.com/embed/iJ2suN2M4WY