முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றும் போதே சுமந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது நீண்டகாலமாக நடத்தப்படாதுள்ள மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்துவதற்கான சட்டச் சிக்கலைத் தீர்க்கும் வகையிலான தனி நபர் பிரேரணை ஒன்று எம்.ஏ.சுமந்திரனால் நீண்ட காலத்துக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இதற்கான சட்டத் தடைகள் நீக்கப்பட்டு இரண்டாம் வாசிப்பும் வாக்கெடுப்போ விவாதமோ இன்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், இன்று அதனை நாடாளுமன்றில் மூன்றாம் வாசிப்புக்காக எடுத்துக் கொண்டு நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டிருந்தது. எனினும் இன்று அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

இந்தநிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், இந்த பிரேரணையை இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி முன்னதாக தம்முடன் இணங்கி இருந்த போதும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரிக்கத் தீர்மானித்து அறிவித்ததை அடுத்து, ஜனாதிபதி பழிவாங்கும் வகையில் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தினார்.

இதேவேளை நாளையும் நாடாளுமன்ற அமர்வு இருக்கின்ற நிலையில், தமது பிரேரணையை நாளைய நிகழ்ச்சி நிரலிலேனும் உள்ளடக்காவிட்டால், ஜனாதிபதி தமிழ் மக்கள் முன்பாகவும் நாட்டு மக்கள் முன்பாகவும் இனவாதியாக காட்டப்படுவார் என எச்சரித்தார்.

நான் செய்யவிருந்த ஒரு விடயத்திற்கு அனுமதி கொடுப்பதாக சொல்லி விட்டு கடைசி நேரத்தில் இவ்வாறு தடுப்பதன் மூலமாக எங்கள் மக்கள் மீது வெறுப்பைக் காட்டும் நிகழ்ச்சியாக தான் நாம் இதைப் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவித்த அமைச்சர்கள் 

இதனை அடுத்து சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha), எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) ஆகியோர் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர்.

தமிழ் மக்களைப் பழிவாங்க முற்படும் ரணில் : நாடாளுமன்றில் சுமந்திரன் குற்றச்சாட்டு | Ranil Seek Revenge On The Tamil People Sumanthiran

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க (Gevindu Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) ஆகியோர் இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இறுதியாக மீண்டும் எழுந்த சுமந்திரன், ரணில் விக்ரமசிங்க இந்த தனி நபர் பிரேரணையை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றித் தருவதாக தமக்கு உறுதியளித்திருந்தாகவும், ஆனால் அவர் தற்போது மிகப்பெரிய இனவாதியாக செயற்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.