ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) அவரது கூட்டாளிகளை கண்டிக்குமாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) கோரிக்கை விடுத்துள்ளார்.
கண்டி (Kandy) – புஸ்ஸல்லாவையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நேற்று (22.04.2024) அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவில் அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்டுக்கடங்காத குண்டர்கள், மூத்த துணைத் தலைவர் செல்லமுத்து மற்றும் அவரது மகன்கள் தலைமையிலான அரசாங்கக் கூட்டாளிகள், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாருக்கு எதிராக புஸ்ஸல்லாவையில் தாக்குதல் நடத்த முயன்றனர்.
சஜித் தரப்புடன் அரசியல் கூட்டணி கிடையாது! ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு
அச்சுறுத்தும் நடவடிக்கை
அவதூறாகப் பேசி அருக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அவரது கூட்டாளிகளுக்கு ஒழுக்கம் கற்று கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஏற்படவுள்ள சிக்கல்
ஒட்டுமொத்த அமைச்சரவைக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
Unruly thugs of Ceylon Workers Congress (#CWC), a government ally, led by senior vice president SellaMuttu and his sons attempted to attack, spoke filth and issued threats against our Kandy district parliamentarian of Tamil Progressive Alliance (#TPA) VeluKumar at Pussellawa in… pic.twitter.com/UmDZpZud0Y
— Mano Ganesan (@ManoGanesan) April 21, 2024
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |