முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்ளுர் விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விமான போக்குவரத்திற்காக பெருந்தொகையை செலவிட்டுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் ாபது வேட்பாளர்களுக்கு விமான போக்குவரத்து வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படை 56 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் பிரச்சார காலப்பகுதியான 34 நாட்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விமான படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான பயணங்கள் 

அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 23 விமானப் பயணங்களுக்கு 29.09 மில்லியன் ரூபாவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு 11 விமானப் பயணங்களுக்கு 20.75 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளனர்.

உள்ளுர் விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில் | Ranil Spends Huge Amounts For The Trips

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச இரண்டு விமானப் பயணங்களுக்கு 1.44 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக விமான படை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம்

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு விமானப் பயணங்களுக்கு 2.68 மில்லியன் ரூபாவும், முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன ஒரு விமானப் பயணத்திற்கு 1.24 மில்லியன் ரூபாவையும் செலவிட்டுள்ளார்.

உள்ளுர் விமான பயணங்களுக்கான பெருந்தொகை பணத்தை செலவிட்ட ரணில் | Ranil Spends Huge Amounts For The Trips

எனினும் தேர்தல் பிரச்சார காலப்பகுதியில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எந்தவொரு விமான பயணங்களையும் மேற்கொள்ளவில்லை என விமான படை தெரிவித்துள்ளது.

இந்த தரவுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைய தென்னிலங்கை ஊடகம் ஒன்று விடுத்த கோரிக்கைக்கு அமைய விமான படை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்