முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்ல்ஸ் நிர்மலநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைக்காக மன்னார் மாவட்டத்திற்கு சென்றபோது மரியாதை நிமித்தமாக வன்னி மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அதனை அறிந்த ஆதாரவளர்களும் குறித்த பகுதியில் திடீரென திரண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் 

தமிழ் மக்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் குழப்பம் நீடிக்கும் சூழலில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அரசியல் ரீதியில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்.

இந்நிலையில்,  மன்னார் தமிழரசு கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதே நேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்த பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றிருந்தது. 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்ல்ஸ் நிர்மலநாதன் வீட்டிற்கு திடீர் விஜயம் | Ranil Surprise Visit Charles Nirmalanathan House

முன்னுக்கு பின் முரணாகவும், முடிவுகளின்றியும் தமிழரசுக் கட்சி காலை மாலை என மாறுபட்ட அறிக்கைகளை இந்த காலப்பகுதியில் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17)
மதியம் மன்னார் பஸார் பகுதியில் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் இடம்
பெற்றது.

குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இதன் போது ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான்,சுரேன் ராகவன், நாடாளுமன்ற
உறுப்பினர்களான கே.திலிபன், முசராப்,முன்னாள் ஆளுனர் அசாத்சாலி உற்பட அரசியல்
பிரதி நிதிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.