முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே: பிரசார கூட்டத்தில் எம்.ராமேஸ்வரன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள வேண்டும்
என்பதே அனைத்து மக்களினதும் எதிர்ப்பார்ப்பாகும். செப்ம்பர் 21 ஆம் திகதி
அந்த எதிர்பார்ப்பு ஈடேறும் என்று இ.தொ.காவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும், சுயேட்சை வேட்பாளரான ரணில்
விக்ரமசிங்கவை ஆதரித்து,
நுவரெலியா மாநகரில் 15.09.2024 அன்று மதியம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் உரையாற்றும் போதே மருதபாண்டி ராமேஷ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே: பிரசார கூட்டத்தில் எம்.ராமேஸ்வரன் | Ranil Wickramasingh Rameswaran As President Again

அரசியல் ஸ்தீரத்தன்மை

“ நாடு நெருக்கடியில் இருந்தபோது எதிரணியில் இருந்தவர்களெல்லாம் ஆட்சியை
பொறுப்பேற்காது பயந்தோடினர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்காக
முன்வந்து சவாலை ஏற்றார். குறுகிய காலப்பகுதிக்குள் அவர் நாட்டை
மீட்டெடுத்துள்ளார்.

மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அவர் சேவையை வழங்கியுள்ளார்.
இன்று வரிசைகள் இல்லை. அரசியல் ஸ்தீரத்தன்மை ஏற்பட்டுள்ளது. அதனால் தான்
எதிர்க்கட்சிகளால் கூட சுதந்திரமாக அரசியல் செய்யமுடிகின்றது.

மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே: பிரசார கூட்டத்தில் எம்.ராமேஸ்வரன் | Ranil Wickramasingh Rameswaran As President Again

மின்வெட்டு
இல்லை, எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை.

எனவேதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்து ஆள வேண்டும் என வடக்க,
கிழக்கு மலையகம் மற்றும் தெற்கு என நாட்டில் வாழும் அனைத்து மக்களும்
எதிர்பார்க்கின்றனர்.

அந்த எதிர்ப்பார்ப்பு செப்டம்பர் 21 ஆம் திகதி
நிறைவேறும். 22 ஆம் திகதி ஆகும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே மீண்டும்
ஜனாதிபதியாக இருப்பார். மீண்டும் ரணில், வேண்டும் ரணில் என நாம் பிரசாரம்
செய்துவருகின்றோம்.” என்றும் தெரிவித்துள்ளார்.

.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்